ETV Bharat / state

வரையறுக்கப்படாத சந்தை கடைகள் மீது உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம்!

சந்தை என வரையறுக்கப்படாத இடங்களில் மொத்த வியாபாரம் செய்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jan 19, 2021, 8:54 PM IST

சென்னை: சென்னை ஜார்ஜ் டவுனில் மொத்த வியாபாரம் நடத்தி வந்த நிலையில், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வர்த்தகம் அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல் காரணமாக தமிழ்நாடு சந்தைகள் ஒழுங்குமுறை சட்டம் 1995-இல் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி கோயம்பேடு சந்தையை மொத்த விற்பனை வளாகமாக அறிவித்து 1996-இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், பத்ரியன் தெருவில் உள்ள பூக்கடைகளுக்கு சீல் வைத்து சி.எம்.டி.ஏ. பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த தனி நீதிபதி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவு தொடர்பான மேல்முறையீடு வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட வெவ்வேறு அமர்வுகள் விசாரித்தது. ஒரு அமர்வு பூக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது. மற்றொரு அமர்வு தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது.

இதனால் இந்த வழக்குகள் மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்விற்கு பரிந்துரைக்கப்பட்டது. தமிழ்நாடு சந்தைகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி சந்தைகள் குழுவிற்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? வியாபாரிகள் மொத்த வியாபரம் செய்கிறார்களா? என்பதை தீர்மானித்து சந்தைக்குழு முடிவெடுக்க முடியுமா? அவ்வாறு வியாபாரத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா? என்ற கேள்விகள் தொடர்பாக நீதிபதிகள் ஆர்.மகாதேவன், என்.ஷேஷசாயி, ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் விசாரித்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழ்நாடு சந்தை ஒழுங்குமுறை சட்டத்தில், சீல் வைக்க உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி எந்த பிரிவுகளும் சட்டத்தில் இல்லை என்ற போதிலும், சந்தை என வரையறுக்கப்படாத பகுதிகளில் மொத்த வியாபாரம் நடத்தப்படவில்லை என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியிருப்பதால், விதிமீறி செயல்படும் வியாபாரிகளின் கடைகளுக்கு சீல் வைக்க உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல வியாபாரிகள் செய்வது மொத்த வியாபாரமா அல்லது சில்லறை வியாபாரமா என முடிவெடுக்க உள்ளாட்சி அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளதே தவிர சந்தை குழுக்களுக்கு இல்லை என விளக்கம் அளித்து தீர்ப்பளித்தனர்.

இதையும் படிங்க: கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.