ETV Bharat / state

Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது; வருமானவரி கணக்கில் காட்டியதை விட கணக்கில் அதிக பணம்! - Enforcement Directorate

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Jun 14, 2023, 3:15 PM IST

Updated : Jun 14, 2023, 11:04 PM IST

20:00 June 14

காவலில் எடுக்க அமலாக்கத்துறை கூறும் காரணம்?

வருமானவரித்துறை தாக்கலில் தெரிவித்ததை விட வங்கிக் கணக்கில் உள்ள பணம் மிக அதிகம் - அமலாக்கத்துறை

18:51 June 14

"குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன"

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன - அமலாக்கத்துறை

18:00 June 14

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

17:44 June 14

காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனு!

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனு தொடர்ந்த நிலையில் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

17:03 June 14

"அவகாசம் இருக்கும் போது என்ன அவசரம்"

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் 2 மாதம் அவகாசம் வழங்கியுள்ள நிலையில் அவசர அவசரமாக கைது நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்துள்ளதாக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு

16:24 June 14

"9 ஆண்டு தோல்வியை மறைக்கவே செந்தில் பாலாஜி கைது"

மத்தியில் பாஜக அரசின் 9 ஆண்டு கால வேதனையான ஆட்சியை மறைக்கவே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து

16:23 June 14

பழிவாங்கும் வேட்கையில் பாஜக - அமைச்சர்

பாஜக அரசு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வேட்கையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

16:04 June 14

செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் அவரை ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

15:48 June 14

செந்தில் பாலாஜி சிகிச்சை அறையில் நீதிபதி!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் அறையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி விசாரணை நடத்தி வருகிறார். அமைச்சர்கள் சேகர் பாபு உள்ளிட்டோர் உடன் இருக்கின்றனர்.

15:45 June 14

4 மணிக்கு அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்.பியும் வழக்கறிஞருமான வில்சன் ஆகியோர் 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.

15:44 June 14

அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக அவர் ஆல்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

15:39 June 14

செந்தில் பாலாஜியின் மனைவி மனு வேறு அமர்வுக்கு மாற்றம்!

செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதி சக்திவேல் விசாரிக்க மறுத்த நிலையில், நீதிபதிகள் பி.பரதன் சக்ரவர்த்தி மற்றும் ஜெ.நிஷா பானு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

15:37 June 14

ஓமந்தூரார் மருத்துவமனையில் நீதிபதி அல்லி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிய சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

15:23 June 14

மருத்துவமனைக்கு விரையும் நீதிபதி!

சென்னை செசன்சு கோர்ட் நீதிபதி அல்லி, அமலாக்கத்துறையின் மனுவை விசாரிக்க ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

15:19 June 14

செந்தில் பாலாஜி ரிமாண்ட்?

சென்னை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆஜராகி, செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதைக் கேட்ட நீதிபதி மாலை 5 மணிக்கு விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

15:00 June 14

நீதிபதி சக்திவேல் திடீர் விலகல்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகியுள்ளார்.

Last Updated : Jun 14, 2023, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.