ETV Bharat / state

வளிமண்டல சுழற்சி காரணமாக சில மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்பு! - List of rain

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக ிமழை பெய்ய வாய்ப்பு இருக்கக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

List of rain prone districts
List of rain prone districts
author img

By

Published : May 9, 2021, 8:19 AM IST

தென் தமிழ்நாடு, அதனை ஒட்டிய குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 1 கிலோமீட்டர் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்பிருக்கக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று (மே 08) மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் தமிழ்நாடு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

(மே 09): மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

(மே 10): மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்கள், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

(மே 11, 12) : மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், ஒரு சில வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு:

மே 11 முதல் மே 13ஆம் தேதி வரை மேற்கு, வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் கடலோரம் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூட்டும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்):

மதுக்கூர் (தஞ்சாவூர் ) 6 செ,மீ, பெரியநாயக்கன்பாளையம் (கோயம்பத்தூர் ), சோழவந்தான் (மதுரை), திருத்தணி (திருவள்ளூர்), தாராபுரம்(ஈரோடு) தலா 5 செ.மீ,. திருமங்கலம்(மதுரை), மன்னார்குடி(திருவாரூர்), ஆவுடையார்கோவில் (புதுக்கோட்டை), சாத்தூர் (விருதுநகர்) தலா 4 செ.மீ,. ஆண்டிபட்டி ( தேனீ), வத்திராயிருப்பு (விருதுநகர்), அன்னுர் (கோயம்பத்தூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), மயிலாடி, சித்தார் (கன்னியாகுமாரி) ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.