ETV Bharat / state

'எல்.ஐ.சி.யை விற்பது சட்டவிரோதம்'

எல்.ஐ.சி.யை விற்பது சட்ட விரோதமானது என பொதுத்துறை மற்றும் பொது சேவைகளுக்கான மக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

எல்.ஐ.சி யை விற்பது சட்ட விரோதமானது
எல்.ஐ.சி யை விற்பது சட்ட விரோதமானது
author img

By

Published : Jan 31, 2022, 7:41 PM IST

சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் அரசின் உள்ள பங்குகளில் 10 விழுக்காட்டை பொது விற்பனை செய்வது தொடர்பாக பொதுத் துறை மற்றும் பொதுச் சேவைகளுக்கான மக்கள் ஆணையத்தின் உறுப்பினர்கள் இன்று செய்தியாளரைச் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர்கள், "எல்.ஐ.சி.யை விற்பது சட்டவிரோதமானது, அரசியல் சாசனத்துக்கு முரணானது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அரசின் பங்குகளில் 10 விழுக்காட்டை பொது விற்பனைக்காகக் கொண்டுவருவது தொடர்பாகவும், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கும் எதிராகக் குரல் கொடுத்துவரும் மக்கள் ஆணையம் கருதுவது...

'பெருந்தொற்றுக் காலத்தில் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுப்படுத்த வேண்டிய நிலையில், 64 ஆண்டு காலமாக எல்.ஐ.சி. அப்பணியைத் திறம்படச் செய்துவருகையில் எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை நிகழ்வதென்பது கவலையளிக்கிற ஒன்றாகும்' என்பதே ஆணையத்தின் கருத்து" என்றனர்.

அரசின் பங்கு 50% வேண்டும்

பொதுத்துறை மற்றும் பொதுச் சேவைகளுக்கான மக்கள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர் தே. தாமஸ் பிராங்கோ கூறுகையில், "தனியார் நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும். அரசு தன் பங்குகளை 50 விழுக்காடாகக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

மல்கோத்ரா குழு அளித்த பரிந்துரைக்கு எதிராக எல்.ஐ.சி. ஊழியர் சங்கங்கள் 25 வருடங்களாகப் போராடிவருகின்றன. மேலும் எல்.ஐ.சி. பங்கு விற்பனை மூலம் அந்தப் பரிந்துரையை நிறைவேற்றி உள்ளது அரசு" எனத் தெரிவித்தார்.

நீதியரசர் (ஓய்வு) அரி. பரந்தாமன் கூறுகையில், "எல்.ஐ.சி. 13 லட்சம் முகவர்களைக் கொண்டுள்ளது. 88 விழுக்காடு பாலிசிகள் அவர்கள் மூலமே வருகின்றன. ஆனால் தனியார் நிறுவனங்களிலோ 70 விழுக்காடு பாலிசிகள் வங்கிகள் மூலமே விற்கப்படுகின்றன. எனவே முகவர் சக்தியையோ பாலிசிதாரர்கள் மனத்தில் உள்ள நற்பெயரையோ மதிப்பிடவே முடியாது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டு வழிக் கல்வித் திட்டம் நடைமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.