தேர்தல் பரப்புரையின் இறுதி நாளன்று, தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பரப்புரையை நிறைவு செய்வதற்காக குனியமுத்தூர் செல்லும் வழியில், அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் அதிமுகவைச் சேர்ந்த ஏழு பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்கு மையங்களில் கூடுதல் காவல் துறையினரைப் பணியமர்த்தக் கோரி தலைமைத் தேர்தல் அலுவலருக்கு அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஆர்.எம். பாபு முருகவேல் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: பெண்ணின் தங்க கம்மலை திருடினரா திமுகவினர்? - வெளியான வீடியோ!