சென்னை: கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி மூலமாகப் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
ஊரடங்கு நீடிப்பதால், பள்ளிகள் திறப்பதில் சாத்தியமில்லை எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான (2021-2022) பாடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் நாளை (ஜூன் 19) தொடங்கிவைக்கிறார்.
தொடர்ந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகளா? முதலமைச்சர் நாளை ஆலோசனை