தமிழ்நாட்டில் செப்டம்பர் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை வளாக அலுவலர்கள், அனைத்து பத்திரிகையாளர்களும் இன்று (செப்டம்பர் 11) கரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் பரிசோதனை செய்து கொண்டனர்.
சட்டப்பேரவை வளாக அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்தப் பரிசோதனையின் முடிவு நாளை (செப். 12) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.