ETV Bharat / state

பெரியார் குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை! - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: பெரியார் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'Legal action will be taken against those who spread slander about Periyar'

author img

By

Published : Jul 20, 2020, 10:54 PM IST

சென்னை திருவான்மியூரில் இந்திய ஊடக சங்கம் சார்பில், பத்திரிகையாளர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார், பத்திரிகையாளர்களுக்கு நிவாரணத்தை வழங்கினர்.

அப்போது பேசிய அவர், “கரோனா வைரஸ் பேரிடர் காலத்தில், உலகிற்கு செய்தி அளிக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடும், தன்னலமற்ற தியாகத்தோடும் பத்திரிகையாளர்கள் களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்திய ஊடக சங்கம் சார்பில் 17ஆவது கட்டமாக பத்திரிகையாளர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களின் நலனில் அதிமுக அரசு அக்கறை செலுத்துகிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறையினரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்றும், பத்திரிகை சுதந்திரத்திற்கு மத்திய அரசு அழுத்தம் தந்தாலும் பத்திரிகையாளர் பக்கமே அரசு துணை நிற்கும்.

பெரியார் பற்றி அவதூறு பரப்புவோரை இணையவழி குற்ற புலனாய்வு (சைபர் கிரைம்) காவல்துறையினர் கண்காணித்து வருகிறது. பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். பெரியார் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: சவுதியில் சிக்கித் தவிக்கும் மகன் - தாய் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.