சென்னை: மாண்டஸ் புயல் நாளை(டிச.9) இரவு கரையைக் கடக்கவுள்ளது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் நடக்கவிருந்த சில தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதேபோல், புதுச்சேரி அரசும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதன்படி நாளை(டிச.9), “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, புதுச்சேரி, காரைக்கால்” ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எதிரொலி:யாருக்கெல்லாம் பரீட்சை ஒத்திவைப்பு தெரியுமா?