ETV Bharat / state

'நாட்டிற்கு நிழல் தரும் ஆலமரம் காங்கிரஸ்' - குஷ்பு - Kushbhu

சென்னை: நாட்டிற்கு நிழல் தரும் ஆலமரம் போன்றது காங்கிரஸ் கட்சி என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

rajiv gandhi 75th birthday
author img

By

Published : Aug 21, 2019, 2:32 AM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75ஆவது பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதில் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, மூத்தத் தலைவர் குமரி ஆனந்தன், செய்தி தொடர்பாளர் குஷ்பு, தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி. ஜெயகுமார், ஹெச். வசந்த குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்புரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளைத் தேர்வு செய்யும் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் கூறினார். ராஜிவ் காந்தியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று அவர் இந்த நாட்டிற்காக செய்த தியாகத்தை மக்களிடம் எடுத்து கூறுவோம் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ். அழகிரி, ‘இந்தியாவில் நம்முடைய இரண்டு பெரிய எதிரிகள் பாஜக மற்றும் அதிமுக தான். ப. சிதம்பரம் தொடர்ந்து மோடிக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதன் விளைவாகவே அவரது வீட்டில் தற்போது சிபிஐ சோதனை செய்து வருகின்றனர். தேசிய அளவில் உள்ள சர்வாதிகாரிகளையும், சென்னையில் உள்ள அடிமை கூட்டத்தையும் தகர்த்து எறிய வேண்டும் என்றால் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்’ என கூறினார்.

ராஜிவ் காந்தி பிறந்த நாள் விழாவில் காங்கிரஸ் பிரமுகர்கள் பங்கேற்பு

தொடர்ந்து பேசிய குஷ்பு, வெற்றி-தோல்வி அரசியலில் சகஜம் என்றும், இந்த தோல்வியால் மிகப்பெரிய வெற்றி நமக்கு காத்து கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும், நாட்டிற்கு நிழல் தரும் ஆலமரம் போன்றது காங்கிரஸ் கட்சி என்று கூறிய அவர், ராஜிவ் காந்தியின் பிறந்த நாளான இன்று முதல் ஒன்றுபட்டு செயல்படுவோம் எனவும் கூறினார்.

Intro:Body:ராஜிவ் காந்தியின் 75 ஆவது பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, செய்தி தொடர்பாளர் குஷ்பு, தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஜெயகுமார், விஷ்ணு பிரசாத், மானிக் தாகூர், வசந்த குமார், மூத்த தலைவர் குமரிஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு :

சிதம்பரத்தை இந்த பூமிக்கு பாரம் என்று முதவர் கூறினார். எந்த உருவத்தை பார்த்தால் இந்த பூமிக்கு பாரமாக உங்களுக்கு தெரிகிறது. சொல்கின்றனவர் பாரமாக இருக்கின்றாரா அல்லது சொன்னவரின் தலைமையை பார்த்து பாரமாக இருக்கிறதா. ஆக இந்த நாட்டிற்கும், மக்களுக்கும் பாரமாக இருக்கின்றவர்கள் மற்றவரை பார்த்து பாரமாக இருக்கிறார்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம். முதல்வராக இருந்து கொண்டு இப்படி பேசலாமா? . எப்படியாவது காங்கிரசை முடக்க வேண்டும் என பார்க்கிறார்கள். அது நடக்காது.

குஷ்பு பேச்சு :

வெற்றி, தோல்வி அரசியலில் சகஜம்.
இந்த தோல்வியில் மிக பெரிய வெற்றி நமக்கு காத்து கொண்டுள்ளது. காங்கிரஸ் இந்தியவின் ஆலமரம். அதுவே நாட்டிற்கு நிலல் தருகிறது. ராஜிவ் காந்தி பிறந்த நாளான இன்று முதல் ஒன்றுப் பட்டு செயல்படுவோம் என பேசினார்.

கே.எஸ.அழகிரி பேச்சு :

இந்தியாவில் நமக்கு இரண்டு பெரிய எதிரிகள் உள்ளார்கள். ஒன்று பிஜேபி, மற்றொன்று அதிமுக.

சிதம்பரம் தொடர்ந்து மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார் அதன் விளைவு தற்போது சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை செய்து வருகின்றனர்.

தேசிய அளவில் உள்ள சர்வாதிகாரிகளையும், சென்னையில் உள்ள அடிமை கூட்டத்தையும் தகர்த்து எரிய வேண்டும் என்றால் தேசிய அளவில் காங்கிரஸ் அணிகள் இனைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

முகில் வாஸ்னிக் பேச்சு

ராஜிவ் காந்தியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்வோம். அவர் இந்த நாட்டிற்காக செய்த தியாகத்தை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்.

வருகின்ற அடுத்த சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை தேர்வு செய்யும், மற்ற கூட்டணி கட்சிகளும் தேர்வு செய்யும் இறுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதிவி வகிப்பார். வருகின்ற காலத்தில் நமது கூட்டணியை அனைவரும் இனைந்து மேலும் வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.