2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் (அக்.07) அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவரும் நடிகருமான மனோபாலா உள்ளிட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று (அக்.09) நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
![முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09:23:23:1602258803_tn-che-09-cmmeet-7209106_09102020210953_0910f_1602257993_194.jpg)
![முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09:23:23:1602258803_tn-che-09-cmmeet-7209106_09102020210953_0910f_1602257993_394.jpg)