சென்னை: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் யண்டமுரி கவுரி ஸ்கண்டகுமாா் (47). இவர் சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக போதை கடத்தல் கும்பலுக்கு தலைவனாகவும் இருந்துவருகிறார். இவா் மீது என்சிபி எனப்படும் மத்திய போதை தடுப்பு பிரிவிலும், சிபிஐயிலும் வழக்குகள் உள்ளன. இதனிடையே இவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டாக கூறப்பட்டது.
கடந்த ஓராண்டிற்கு மேலாக தலைமறைவாக இருந்துவந்தார். இதையடுத்து என்சிபி, சிபிஐ தனித்தனியாக யண்டமுரி கவுரி ஸ்கண்டகுமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தன. இந்த நிலையில் நேற்று (மார்ச் 18) நள்ளிரவு 12 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இவர் வந்தார்.
அப்போது பயணிகளிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனையில் யண்டமுரி கவுரி ஸ்கண்டகுமார் சிக்கினார். இதையடுத்து அவரை கைது செய்ய குடியுரிமை அலுவலர்கள் டெல்லியில் உள்ள சிபிஐ, என்சிபி தலைமை அலுவலகங்களுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: 11 பைக்குகள் திருட்டு வழக்கில் ஒருவருக்கு சிறை; மற்றொருவருக்கு சிறார் நீதி வாரியத்தில் ஜாமீன்