சென்னை மெட்வே ஹார்ட் இன்ஸ்டியூட்டின் ஐந்தாவது கிளையை மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
நீண்டநாள் சிறைக் கைதிகள் விடுதலை
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தது போல நீண்ட நாள்களாக சிறையில் இருக்கும் 700 நபர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தகுதியான நபர்களை பட்டியலிட சிறைச் சாலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சர் அறிவித்த எண்ணை விட கூடுதலான நபர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்,
ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடை விதிக்க சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும்.
எழுவர் விடுதலை
எழுவர் விடுதலை குறித்து முதலமைச்சர் அக்கறையுடன் இருக்கிறார். குடியரசுத் தலைவருக்கு இதுகுறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: T-23 புலி பிடிபட்டது