ETV Bharat / state

15 லட்சம் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை- ரகுபதி

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 15லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை முடிப்பதற்கு நீதிபதி நியமனம் மற்றும் புதிய மாவட்ட நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் கூறினார்.

15 lakh pending cases in Tamil Nadu
15 lakh pending cases in Tamil Nadu
author img

By

Published : Sep 7, 2021, 9:06 PM IST

சென்னை : நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 15லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை முடிப்பதற்கு நீதிபதி நியமனம் மற்றும் புதிய மாவட்ட நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டத்துறை , சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் மானியக்கோரிக்கை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை (செப்.7) சட்டப்பேரவையில் நடைபெற்றது.

Law Minister RaghuPathy says Action to expedite 15 lakh pending cases in Tamil Nadu
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, “சட்டமும் அரசும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. அனைவரும் சட்டத்தின்முன் சமம். புதிய நீதிமன்றங்களை உருவாக்கி குற்றங்களை குறைத்திட சட்ட அறிவு தேவை ,அதை கருத்தில் கொண்டு சட்டக்கல்லூரிக்கு வித்திட்டவர் கருணாநிதி.

தமிழ் வழக்காடு மொழி

இந்தியாவில் 4 மாநிலங்களில் இந்தி நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக உள்ளது. ஆகவே தமிழ் மொழி வழக்காடு மொழியாக ஆக்கும்வரை மத்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும் வலியுறுத்தி கொண்டே இருப்போம். சைபர் சட்டம், பொருளாதார சட்டம் ஆகியவை நவீனப்படுத்தப்படும். சிறைச்சாலை குற்றம் செய்தவரை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும்.

15 lakh pending cases in Tamil Nadu
வழக்கு

கரோனா காலத்தில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஆர்.டிபிசிஆர் டெஸ்ட் எடுத்து 100 விழுக்காடு கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமே. மன்னர் காலம் தொடங்கி தற்போது வரை நிர்வாகம் என்பது நீதித்தன்மையோடு செயல்பட வேண்டும்.

அனைவரின் அடிப்படை உரிமை, சுதந்திரம், கொள்கை உள்ளிட்ட நம்மை பாதுகாத்திடும் நோக்கில் அரசு அமைத்ததுதான் சட்டம்.

புதிய நீதிபதி, நீதிமன்றம்

தமிழ்நாட்டில் 1680க்கு மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. அதில் 15 லட்சத்து 33 ஆயிரத்து 175 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதை குறைப்பதற்கு விரைவில் மாவட்ட நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

புதிதாக 3மாவட்ட நீதிமன்றங்கள் வர இருக்கிறது. மேலும் வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகளின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் நீதி கிடைத்திட அரசு சார்பில் இலவச சட்ட உதவி மையம் உள்ளது.

தூத்துக்குடியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்

100ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீதிமன்ற கட்டடங்களின் தன்மையை ஆராய்ந்து அது புதுப்பிக்கப்படும். அது மட்டுமல்லாது விருதுநகர், தூத்துக்குடி, உள்ளிட்ட 5மாவட்டங்களில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் விரைவில் அமைக்கப்படும்.

இதையும் படிங்க : தமிழ்நாடு சட்டத் துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.