ETV Bharat / state

முகக்கவசம் அணிவது தொடர்பான விவகாரம் - காவல்துறை மீது சட்டக்கல்லூரி மாணவர் குற்றச்சாட்டு - காவல்துறை மீது சட்டக்கல்லூரி மாணவர் குற்றச்சாட்டு

முகக்கவசம் அணிவது தொடர்பான விவகாரத்தில் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் தாக்கியதாக சென்னை தரமணி சட்டக்கல்லூரி மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டக்கல்லூரி மாணவர் குமுறல்
சட்டக்கல்லூரி மாணவர் குமுறல்
author img

By

Published : Jan 15, 2022, 12:18 PM IST

Updated : Jan 15, 2022, 12:50 PM IST

சென்னை : வியாசர்பாடி புது நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம்(21). இவர் தரமணி சட்டக்கல்லூரியில் 5ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியாமல் சென்றதாக வழக்குப்பதிவு செய்து அபராத தொகையைக் கட்ட கூறியுள்ளனர்.

அதற்கு ரஹீம் பல சமூக விரோதிகள் நடமாடி வருவதாகவும், அவர்களைப் பிடிக்கத் துப்பு கிடையாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலர் யுத்திரகுமார் என்பவரை கண்ணத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையை பணிசெய்யவிடாமல் தாக்கியதாக ரஹீமை கொடுங்கையூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

முகக்கவசம் அணிவது தொடர்பான விவகாரம் - காவல்துறை மீது சட்டக்கல்லூரி மாணவர் குற்றச்சாட்டு

இந்நிலையில் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தன்னை நிர்வாணமாக்கி பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து காயப்படுத்தி கொடுமைப்படுத்தியதாகக் கைதான சட்டக்கல்லூரி மாணவர் ரஹீம் புகார் அளித்துள்ளார்.

சட்டக்கல்லூரி மாணவர் குமுறல்
சட்டக்கல்லூரி மாணவர் குமுறல்

மேலும் 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் காவல் நிலையத்தில் புகுந்து ரஹீமுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் ரஹீம், அன்றிரவு முககவசம் அணிந்து வந்ததாகவும், ஒழுங்காக அணியவில்லை என காவல்துறையினர் அபராத தொகை செலுத்தக் கூறியதாக தெரிவித்துள்ளார். அதற்கு முடியாது என கூறியதால் வழக்குப்பதிவு செய்து காவல் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை நிர்வாணமாக்கி இரவு முழுவதும் பைப் மற்றும் பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்துக் கொடுமைப்படுத்தியதாகவும், பீரோவில் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாப்பாடு வாங்கி கொடுத்துச் சாப்பிட விடாமல் தாக்கியதாகவும் ரஹீம் தெரிவித்துள்ளார். காயம் ஏற்படுத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிடிபடாமல் ஓடும் காளைகள், பிடித்தே தீருவேன் என அடம் பிடிக்கும் காளையர்கள்

Last Updated : Jan 15, 2022, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.