திருவள்ளூர்: 1989ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக திமுக ஆட்சியில் தருமபுரி மாவட்டத்தில் சுய உதவிக்குழுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 7.25 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்தக் குழுக்களில் சுமார் ஒரு கோடியே ஆறு லட்சம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு அரசின் சார்பில் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டுவருகிறது. இதன்மூலம் பெண்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வழிவகை செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு மகளிர் குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி இதுவரை 10 ஆயிரம் கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் மூன்றாயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தினை நாளை ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
இதற்கென திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இந்த விழாவில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஸ்டாலின் கடனுதவி வழங்க இருக்கிறார்.
இதையும் படிங்க: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தொலைதூர தேர்வாளர்கள் அவதி