ETV Bharat / state

லேப்டாப் திருட்டு- சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை - லேப்டாப் திருட்டு சிசிடிவி காட்சி

சென்னையில் திறந்து கிடந்த செல்போன் கடைக்குள் புகுந்து லேப்டாப்பை திருடிச் சென்றவரை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

லேப்டாப் திருட்டு
லேப்டாப் திருட்டு
author img

By

Published : Jul 23, 2021, 11:50 AM IST

சென்னை: தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் செல்போன், லேப்டாப் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் எட்வின். இவர், கடையை திறந்து வைத்து விட்டு கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடைக்குள் புகுந்து அங்கிருந்த மடிக்கணினியை திருடிச் சென்றுள்ளார். எட்வின் வந்து பார்த்தபோது கடையிலிருந்த மடிக்கணினி திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக எட்வின் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தார்.

சிசிடிவி மூலம் விசாரணை

அதில், சிவப்பு நிற டிசர்ட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மடிக்கணினியை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

லேப்டாப் திருட்டு

இது குறித்து எட்வின் சேலையூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பல வீடுகளில் கைவரிசை - திருடன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.