சென்னை: குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த தொழிலதிபர் கிரி (45), அவரது மனைவி கமலா பீன் (40) இருவரும் ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து அஹமதாபாத் செல்ல காத்திருந்தனர்.
அப்போது கமலா பீனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக விமான ஊழியா்கள் வீல் சேரில் கமலா பீனை ஏற்றி விமான நிலைய மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து குறித்து தகவல் அறிந்த சென்னை விமான நிலைய காவல் துறையினர், விரைந்து சென்று, அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்த நடிகை