ETV Bharat / state

பறவைகள் கணக்கெடுப்பில் களமிறங்கிய கல்லூரி மாணவிகள்! - லேடி டோக் கல்லூரி

மதுரை லேடி டோக் கல்லூரி விலங்கியல் துறை மாணவிகள் மதுரை மற்றும் ராமேஸ்வரத்தில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவியர்

author img

By

Published : Jan 21, 2023, 7:14 AM IST

மதுரை: ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு, மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் விலங்கியல் துறை மாணவியர், பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்புக்காகக் கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று, வெளிச்சநத்தம் பகுதிக்குச் சென்றனர். புதர் மற்றும் களை பகுதியில், 26 வெவ்வேறு பறவை இனங்களைக் கண்டறிந்தனர்.

பொதுவாகக் காணப்படும் பறவைகளான உண்ணிக் கொக்கு, நாகணவாய், பச்சைக்கிளி, தையல் சிட்டு, அண்டங் காக்கை, காகம், கரிச்சான், தவிட்டுக்குருவி, சுடலைக் குயில், ஊதாத் தேன்சிட்டு, பெரிய தேன்சிட்டு, பச்சைப் பஞ்சுருட்டான், செண்பகம், விசிறிவால் கதிர்க்குருவி, பனை உழவாரன், காட்டுக்கீச்சான், செம்மார்பு குக்குறுவான், மயில், காட்டுச் சிலம்பன், செம்மீசைச் சின்னான் ஆகியவற்றைக் கண்டறிந்தனர்.

குறிப்பிடத்தக்க வேட்டையாடும் பறவைகளான தேன், பருந்து, வல்லூறு, ஈரநிலப் பறவைகளான கொண்டை நீர்க்காகங்கள், நடுக்கொக்குகள், அன்றில் பறவைகள் மற்றும் வலசை பறவையான சூறைக்குருவிகள் கூட்டமாகப் பறப்பதை வானத்தில் கண்டு மகிழ்ந்தனர்.

பறவைகளை கண்டு ரசித்த மாணவிகள்
பறவைகளை கண்டு ரசித்த மாணவிகள்

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வலசை பறவைகளுக்குப் பிரபலமான குலமங்கலம் கண்மாய் பகுதியில் ஈரநிலப்பறவைகளான மீசை ஆலா, சிறிய சீழ்க்கைச் சிறகி வாத்துகள், நீலச்சிறகு வாத்துகள், புள்ளி மூக்கு வாத்துகள், தாமரைக்கோழிகள் மற்றும் குறிப்பாக இனவிருத்தி செய்யப்பட்டு குஞ்சுகளோடு காணப்பட்ட நாமக்கோழிகள் மிகவும் ஈர்க்கக்கூடிய காட்சிகளாக இருந்தன. மேலும் தகைவிலாங் குருவிகள், நத்தை குத்தி நாரைகள், நெடுங்கால் உள்ளான், செம்மூக்கு ஆள்காட்டி, நீர்க்காகங்கள், மற்றும் பிற பறவைகளைக் கண்டு மகிழ்ந்தனர்.

இதையடுத்து லேடி டோக் கல்லூரியின் விலங்கியல் துறை மற்றும் பறவையியலாளர் ரவீந்திரனின் இறகுகள் இயற்கை அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த வெளிப்புற பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பிற்காக ஜனவரி 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் இருநாள் பயணமாக ராமேஸ்வரம் கடல் பகுதிக்குச் சென்று இவ்வாண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.

பறவைகள் கணக்கெடுப்பு
மதுரை மற்றும் ராமேஷ்வரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

அங்கு மிகவும் சுவாரசியமான உள்ளூர் மற்றும் வலசை பறவைகளான செந்நாரைகள், சிவப்பு மூக்கு ஆலா, விரால் அடிப்பான், கல்பொறுக்கி பறவைகள், சிற்றெழால் வல்லூறு, பருத்த அலகு ஆலாக்கள், புள்ளிச் செங்கால் உள்ளான்கள், பொரி மண்கொத்தி உள்ளான்கள், கல்திருப்பி உள்ளான்கள், சிவப்புமூக்கு ஆள்காட்டிகள், பட்டைவால் மூக்கன்கள் போன்ற பலவிதமான பறவைகளைக் கணக்கெடுத்தனர்.

இதையும் படிங்க: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓர் ரியல் சேவல் 'ஆடுகளம்' - ஏராளமான பேட்டைக்காரர்கள் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.