கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் தினமும் 30,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் மட்டும் 6,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பின. சென்னையில் கிங்ஸ் அரசு மருத்துவமனை, கீழ்pபாக்கம் அரசு மருத்துவமனை, ராjiவ் காந்தி அரசு மருத்துவமனை என 5 அரசு மருத்துவமனைகள் உள்ளன.
இன்று (மே.13) காலை நிலவரப்படி கிங்ஸ் அரசு மருத்துவமனையில் 198 ஆக்ஸிஜன் படுக்கைகள், 102 ஐ.சி.யு படுக்கைகள் நிரம்பிவிட்டன. கீழ்pபாக்கம் அரசு மருத்துவமனையில் 220 ஆக்ஸிஜன் படுக்கைகள், 130 ஐ.சி.யு படுக்கைகள் நிரம்பிவிட்டன. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 845 ஆக்ஸிஜன் படுக்கைகள், 385 ஐ.சி.யு படுக்கைகள் நிரம்பிவிட்டன. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 410 ஆக்ஸிஜன் படுக்கைகள், 190 ஐ.சி.யு படுக்கைகள் நிரம்பிவிட்டன. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 800 ஆக்ஸிஜன் படுக்கைகள், 150 ஐ.சி.யு படுக்கைகள் நிரம்பிவிட்டன.
படுக்கைகள் கிடைக்காததால் ஆம்புலன்ஸில் வைத்தே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூறுகையில், "நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்க கிட்டத்தட்ட 12 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. அதுவரை அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே இருப்பதால், நாங்கள் சாப்பிடக்கூட செல்ல முடியாத நிலையில் உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், வரி வரும் வழிகள் அல்ல - கமல் ஆவேசம்!