சென்னை: கரூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா வங்கி, இந்தியாவில் உள்ள தனியார் துறை வங்கிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. தற்போது, இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், சேல்ஸ் மற்றும் சேல்ஸ் அசோசியேட்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப் படிப்பை, 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். 31.03.2022 அன்றைய தேதியின்படி குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 28 வயது வரை உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். முழுக்க முழுக்க நேர்முகத்தேர்வு மூலமாகவே நடைபெறும் இந்த பணிக்கு, தேர்வுக் கட்டணம் கிடையாது.
இப்பணிக்கான ஊதியமானது மாதம் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை, கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://www.kvb.co.in/ ல் உள்ள Recruitment of Sales & Service Associates (on contract) என்ற விளம்பரத்தை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து, அதிலுள்ள விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குச் சரியான தகவல்களை அளித்து, அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள், 30.06.2022. இதுவரை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படாத நிலையில், அதிகளவிலான எண்ணிக்கையில் காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அறநிலையத்துறையில் வேலை: ரூ.75ஆயிரம் சம்பளம்... விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம்!