ETV Bharat / state

நடிகை குட்டி பத்மினிக்கு எதிராக புகார் அளித்த பயிற்சியாளர்!

author img

By

Published : May 2, 2019, 9:10 AM IST

சென்னை: கிரீடா பயிற்சி மையத்தை நடத்தி வந்த நடிகை குட்டி பத்மினி தன்மீது புகார் தெரிவித்தது அபாண்டமான குற்றச்சாட்டு என பயிற்சியாளர் சந்தோஷ் கோபி தெரிவித்தார்.

நடிகை குட்டி பத்மினி நடத்தி வந்த கிரீடா பயிற்சி மையத்தில் போலி ரசீதுகளை பயன்படுத்தி 90 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ் கோபி இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் குட்டி பத்மினிக்கு எதிராக புகார் மனு அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்தோஷ் கோபி, ”திறமைக் கொண்ட ஏழை எளிய மாணவ, மாணவிகள் விளையாட்டுத்துறையில் முன்னேற ஒய்எம்சிஏ மைதானத்தை நடிகை குட்டி பத்மினி குத்தகைக்கு எடுத்தார். இதில் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளேன். கடந்த மாதம் கிரீடா பயிற்சி மையத்தில் நஷ்டம் ஏற்படுவதால் மூடுவதாக கூறி குட்டி பத்மினி எங்களிடம் கூறினார்.

பயிற்சியாளர் சந்தோஷ் கோபி

பின்னர் திடீரென்று வேறொரு நபரிடம் கிரீடா பயிற்சி மையத்தின் சாவி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக குட்டி பத்மினிக்கு போன் செய்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். மேலும் கிரீடா நிறுவனத்திலிருந்து TNAGS நிறுவனம் மூலம் போலி ரசீதுகளை பயன்படுத்தி 90 லட்சம் கையாடல் செய்ததாக தன் மீது புகார் தெரிவித்தது அபாண்டமான குற்றச்சாட்டு” என்றார்.

Intro:

Body:90கோடி கையாடல் செய்ததாக கூறியது பொய் என கூறி புகார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.