ETV Bharat / state

உடல் ரீதியாக விளையாட பெண்கள் விளையாட்டு பொம்மையா? - குஷ்பூ ஆவேசம்! - சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்

பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை சரியானது எனவும் பெண்களுக்கு எதிராக யார் குற்றம் புரிந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என குஷ்பூ காட்டமாக பதில் அளித்துள்ளார்.

குற்றம் புரிபவர்கள் தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் - குஷ்பூ காட்டம்

author img

By

Published : Jun 16, 2023, 7:56 PM IST

குற்றம் புரிபவர்கள் தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் - குஷ்பூ காட்டம்

சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தேசிய மகளிர் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகத் தமிழகக் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அலுவலகத்தில் ஏடிஜிபி சங்கரைத் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தேசிய மகளிர் ஆணையத்தில் 2021ஆம் ஆண்டு முதல் தன்னிச்சையாக எடுத்து போடப்பட்ட வழக்குகள் உட்பட 730 வழக்குகள் நிலுவையில் உள்ளது, வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, வன்கொடுமை போன்ற வழக்குகள் அதில் உள்ளதாகவும், தனக்குக் கீழ் உள்ள 6 மாநிலங்களிலிருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான புகார்கள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் பல வழக்குகளில் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாகக் கேட்டறிந்து வந்தேன்.

இதையும் படிங்க: தலைக்கு எவ்வளவு தில்லு பாரு.. சீருடையுடன் மு.க.ஸ்டாலினை விமர்சித்து மீம்ஸ் போட்ட போலீஸ் சஸ்பெண்ட்!

மேலும் எல்லா புகாருக்கும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் புகார் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 1 மாதத்தில் தனக்கு விளக்கம் அளிப்பதாக தமிழக காவல்துறை தரப்பில் கூறியிருக்கின்றனர். அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்ற கணக்கையும் கேட்டிருக்கிறேன். பெண்களுக்கு எதிரான முக்கியமான புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்களை அடிக்கடி காவல் நிலையத்திற்கு வர சொல்லி போலீசார் அலையவைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான விளக்கத்தையும் கேட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, “பெண்களுக்கு எதிராக யார் குற்றங்களில் ஈடுபட்டாலும் தண்டனை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் விளையாடப் பெண்கள் ஒன்றும் பொம்மை இல்லை. அவர்களுக்குச் சரியான தண்டனை கொடுக்க வேண்டும். ஜாமீன் வழங்கக்கூடாது” என குஷ்பூ காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை - பாலியல் வழக்கில் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.