சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "ஜனநாயகக் கடமையாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வந்து வாக்களிக்க வேண்டும்.
திமுகவினர் எப்போதும் தேர்தல் விதிகளை பின்பற்றியது கிடையாது. காலை முதல் அதிக அளவிலான பெண்கள் வெளியில் வந்து வாக்களித்துள்ளனர். விஜய் மிதிவண்டியில் வந்து வாக்களித்தது சாதாரண நிகழ்வுதான். ஆனால், அவர் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மிதிவண்டியில் வந்தாக சிலர் பொய் பரப்புரை செய்கின்றனர்.
வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. வாக்களார்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு கையுறை வழங்கிய பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்!