சென்னை: குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளரும் குமுதம் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் (வயது 56) இன்று (ஜூன் 22) புதன்கிழமை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
தமிழ் இதழியல் உலகில் நீண்ட அனுபவம் கொண்ட ப்ரியா கல்யாணராமனின் இயற்பெயர் ராமச்சந்திரன். எழுத்துலகிலும் பெரும் சாதனைகள் படைத்தவர். ஒரே காலகட்டத்தில் 4-5 தொடர்கள் எழுதிய ஆற்றல் மிகுந்தவர். கரோனா பெருந்தொற்று காலத்தில் பலருக்கு உதவி செய்த இவர் இதழியல் துறையில் பலரை உருவாக்கியவர்.
இந்தநிலையில் ப்ரியா கல்யாணராமனின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
-
குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் என்கிற திரு. க.ராமச்சந்திரன் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/9pCF5CWJXG
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் என்கிற திரு. க.ராமச்சந்திரன் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/9pCF5CWJXG
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 22, 2022குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் என்கிற திரு. க.ராமச்சந்திரன் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/9pCF5CWJXG
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 22, 2022
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்: 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு!