ETV Bharat / state

'மத ரீதியாக பிளவுபடுத்தும் அரசியலுக்கு மக்கள் பலியாகியிருக்கிறார்கள்..!' - கே.எஸ். அழகிரி வேதனை

"மத ரீதியாக பிளவுப்படுத்துகிற அரசியலுக்கு இந்திய மக்கள் பலியாகி இருக்கிறார்கள்" என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

author img

By

Published : May 25, 2019, 8:05 PM IST

கே.எஸ்.அழகிரி

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இதை காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல.. தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது ஆறுதலைத் தருகிறது.

மக்களவைத் தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் ராகுல்காந்தி. அவரது பரப்புரையால் பிரதமர் நரேந்திர மோடி திக்குமுக்காடி போனார். மோடியின் பரப்புரை தரம் தாழ்ந்த நிலையிலும், ராகுல்காந்தி எள்ளளவும் வெறுப்பில்லாமல் எதிர்கொண்டார். இந்தியாவின் கருத்தியலுக்கு எதிராக மக்களிடையே மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலுக்கு, மக்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இதன்மூலம் நாட்டு மக்களிடையே பாதுகாப்பு குறித்து அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

இந்திய மக்களை ஒன்றுபடுத்தி, நம்பிக்கையூட்டுகிற பணியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருக்கும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தவிர, பதவியை தேடிச் செல்வதல்ல. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. இது வீழ்ச்சியல்ல. ஒரு சருக்கல் தான். இதிலிருந்து மீண்டு எழுவோம்.

எனவே, காங்கிரஸ் தலைமை பொறுப்பை ராகுல்காந்தி தொடர வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாகும். இதன் மூலம் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வலிமையுடன் நடத்தி, இந்தியாவையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கிற பணியில் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி அவர்கள் விலகப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இதை அறிந்து காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல, லட்சோபலட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி அவர்கள் விலகுவதை காங்கிரஸ் கட்சியினர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், அனுமதிக்க மாட்டார்கள். இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த ஆறுதலை தருகிறது. 

மக்களவை தேர்தல் தோல்வியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கண்துஞ்சாது, அயராது கடுமையாக உழைத்தவர் ராகுல்காந்தி. அவரது கடுமையான பிரச்சாரத்தினால் திக்குமுக்காடிப்போன பிரதமர் நரேந்திர மோடி சாதனைகளைச் சொல்லி பிரச்சாரம் செய்யாமல் இந்தியாவின் பாதுகாப்பு, ராணுவ வீரர்களின் தியாகம், வகுப்புவாதத்தை வளர்க்கிற வகையில் விஷமத்தனமான கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தமது பிரச்சாரத்தை மாற்றிக் கொண்டார். இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு பலியான இந்திரா காந்தியையும், ராஜீவ்காந்தியையும் கொச்சைப்படுத்தி பேசினார். மோடியின் பிரச்சாரம் தரம் தாழ்ந்த நிலையிலும் ராகுல்காந்தி தமது பிரச்சாரத்தில் எள்ளளவும் வெறுப்பில்லாமல் எதிர்கொண்டார். 

இந்தியாவின் கருத்தியலுக்கு எதிராக மக்களிடையே மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலுக்கு மக்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இதன்மூலம் நாட்டு மக்களிடையே பதற்றமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பேசிய மோடியின் வெற்றியினால் நாட்டு மக்களிடையே கணிசமான பகுதியினர் தங்களது பாதுகாப்பு குறித்து அச்சமும், பீதியும் கொண்டிருக்கிறார்கள். இந்தியா எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற கவலை பலரை வாட்டி வதைத்து வருகிறது. இத்தகைய சூழலில் இந்திய மக்களை ஒன்றுபடுத்தி, நம்பிக்கையூட்டுகிற பணியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்று 43.86 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி 90 இடங்களில் வெற்றி பெற்று 25.81 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. இதை தவிர, மாநில கட்சிகள் 102 இடங்களைப் பெற்று 30.33 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. இதன்மூலம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக 192 இடங்களும், 46 சதவீத வாக்குகளும் பெற்றிருக்கிறது. எனவே, இந்த அடிப்படையில் பார்க்கிற போது பா.ஜ.க.வின் வெற்றி குறித்து யாரும் வியப்படைய அவசியமில்லை. 

இந்திய மக்களை வழிநடத்துகிற பேராண்மையை நேரு பாரம்பரியத்தில் வந்த தலைவர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள். நேரு, இந்திரா, ராஜீவ் பாரம்பரியம் என்பது ஜனநாயக தேர்தல் மூலம் இந்தியாவிற்கு மக்கள் விருப்புரிமையின் அடிப்படையில் வழங்கிய கொடையாகும். அதில் வாழையடி வாழையாக அன்னை சோனியா காந்திக்கு பிறகு காங்கிரசை தலைமையேற்று வழிநடத்தக் கூடிய ஆற்றல்மிக்க தலைவராக ராகுல்காந்தி விளங்கி வருகிறார். பிரதமர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி 1989 இல் பதவி விலகிய பிறகு, கடந்த 30 ஆண்டுகளாக எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும் அந்த வாய்ப்புகளை மறுத்து பதவி மறுப்பாளர்களாக இருந்த பெருமை அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும், ராகுல்காந்தி அவர்களுக்கும் உண்டு. அவர்களது நோக்கம் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தவிர, பதவியை தேடிச் செல்வதல்ல. 

விந்திய மலைக்கு வடக்கே காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. இது வீழ்ச்சியல்ல. ஒரு சருக்கல் தான். இதிலிருந்து மீண்டு எழுவோம்.

எனவே, காங்கிரஸ் தலைமை பொறுப்பை ராகுல்காந்தி அவர்கள் தொடர வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாகும். இதன்மூலம் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வலிமையுடன் நடத்தி, இந்தியாவையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கிற பணியில் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தொடர்ந்து பணியாற்றுவோம் என சூளுரை ஏற்போம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.