ETV Bharat / state

`தடுப்பூசி வினியோகத்தில் மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது`-கே.எஸ். அழகிரி

சென்னை: தடுப்பூசி வினியோகத்தில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி
author img

By

Published : May 8, 2021, 5:02 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் இன்று (மே 07} மாலை நடைபெற்றது.

இதில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சி தலைவர் சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெற உதவிய கூட்டணி கட்சியினருக்கும், புதிதாக பதவி ஏற்றுக்கொண்டுள்ள திமுக அமைச்சரவைக்கும் வாழ்த்து தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறியதாவது, "சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சி தலைவர் சோனியா காந்திக்கு வழங்கியுள்ளோம்.

இது தொடர்பாக இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தனித்தனியாக அழைத்து அவர்களின் கருக்ககளை கேட்டுள்ளோம். அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். இது குறித்து ஆலோசித்து ஜனாயக பூர்வமாக முடிவு எடுக்கப்படும்.

தேர்தல் வெற்றிக்கு எங்கள் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உழைப்பு முக்கிய காரணம். நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க பாஜக அரசே காரணம். தொடர்ந்து மோடி அரசு அலட்சியம் காட்டி வருகிறது. தடுப்பூசி விநியோகத்தில் பாகுபாடு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் இது குறைவாக உள்ளது" என்றார்.

முன்னதாக பேசிய அக்கட்சி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், "தழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்லாற்றியுள்ளது. எங்களுக்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கு நன்றி. இந்த தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி தனது பலத்தை நிரூபித்துள்ளது. கட்சி மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தேர்தல் முடிவுகள் பதிலளித்துள்ளது.

ஸ்டாலினின் அனுபவம் தற்போது மிக முக்கியமான தேவை. திமுகவுக்கு காங்கிரஸ் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தரும். திமுக ஆட்சி மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகம் பெறும். இன்றைய தினம் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது" என்றார்.

இந்த கூட்டத்தில், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ஜெயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.