ETV Bharat / state

ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்கி வைத்த பிரதமர் - கேஎஸ்.அழகிரி - KS Alagiri has said that the Pm has resumed the projects already started

ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களை, மீண்டும் பிரதமர் தொடங்கி வைத்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஒரு மாநில முதலமைச்சர் தன் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை மேடையில் கேட்பது எவ்வாறு நாடகமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

author img

By

Published : May 28, 2022, 12:25 PM IST

சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் ”பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்து பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். அதில் ”ஏற்கனவே சில திட்டங்கள் துவக்கப்பட்ட திட்டங்கள் இந்திய வரலாற்றிலேயே ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களை மீண்டும் துவக்கி வைத்தவர் பிரதமர் மோடி மட்டும்தான்”.

சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டு நூற்றுக்கணக்கான தூண்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல் எண்ணூர் எரிவாயு உள்ளிட்ட திட்டங்கள் ஏற்கனவே துவக்கப்பட்டது. எனவே மீண்டும் அதற்கு துவக்க விழா என்பது ஏற்புடையது அல்ல.

தமிழக முதல்வர் அதில் பெருந்தன்மையுடன் கலந்து கொண்டுள்ளார். எங்களுடைய கருத்து அவர் அதில் கலந்துகொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். பிரதமர் வளர்ச்சி திட்டங்கள் பற்றி பேச வேண்டும், செயல்படுத்த வேண்டும்,. ஆனால் அதை விட்டுவிட்டு அரசு மேடைகளில் அரசியல் பேசுகிறார். இதனால்தான் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமர் நிகழ்ச்சிகளை தவிர்க்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

பெட்ரோல் டீசல் விலையை பொருத்தவரை மத்திய அரசுதான் நீண்டகாலம் விலையை குறைக்காமல் இருந்தது. முதல்வர் ஸ்டாலின் பெட்ரோல் டீசல் விலையில் மூன்று ரூபாய் மற்றும் வரியை குறைத்துள்ளார். அதை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. அவர்களின் அரசியல் பொதுமக்களின் மத்தியில் எடுபடாது.

ஒரு முதலமைச்சர் தன் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை மேடையில் கேட்பது எவ்வாறு நாடகமாகும். அதை கேட்பதற்கு முதல்வருக்கு தகுதி இல்லையா? தேவைகளை கேட்பது தவறு என்றால், அவர்களின் அடிமைத்தனம் தெளிவாக தெரிகிறது.

மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளில் நமக்கு செய்ய வேண்டிய திட்டங்களை தான் முதல்வர் மேடையில் கேட்டுள்ளார். அதில் தவறில்லை. அது அவரின் உரிமை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முழங்காலுக்கும், உச்சந்தலைக்கும் முடிச்சுப் போடுகிறார். அது தவறானது.

தமிழகத்தில் மிகச் சிறந்த கல்வி கொள்கை உள்ளது. இவர்கள் மீண்டும் குலக்கல்வி வாழ்க்கைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். அது உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற நிலையை உருவாக்கும். அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எனவே மாநில கல்வி கொள்கை தான் சிறந்தது. அதில் தமிழகம் உறுதியாக இருக்கும்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் பிரச்சனை இருந்தபோது இலங்கை உட்பட சிறு சிறு நாடுகள் நமக்கு சாதகமாக இருந்தன. அப்போது இலங்கை கச்சத்தீவை கேட்ட போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு கொடுத்தார். ஆனால் அப்போது கூட தமிழக மீனவர்கள் தங்கள் வலைகளை அங்கு காய வைக்கலாம், அங்கு சென்று தங்கிக் கொள்ளலாம் என்ற உடன்படிக்கையோடுதான் கொடுத்தார். ஆனால் நாம் எதிபார்த்ததுபோல் அவர்கள் இல்லாமல் இலங்கை சீனாவுடன் உறவில் இருக்கின்றனர்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் இந்தியா மட்டுமல்லாமல் தமிழகம் கூட உதவி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அதனால் இந்த தருணத்தில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறியது சரியானது. அதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது. தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ் சார்பாக ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரை சோனியா காந்தி இன்று இரவு அல்லது நாளை காலை அறிவிப்பார் " இவ்வாறு அழகிரி கூறினார்.

இதையும் படிங்க: சென்னை 2.0 திட்டம் மூலம் 254 கோடி ரூபாய் செலவில் வெள்ள நீர் வடிகால் பணிகள் - சென்னை மேயர் பிரியா அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.