ETV Bharat / state

தொண்டர்கள் காலில் விழும் நிலை ஈபிஎஸ்ஸுக்கு வரும் - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி - Eps who had the ego of being himself

''அதிமுக தொண்டர்களின் காலில் விழுந்து தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறக்கூடிய நிலை எடப்பாடி பழனிசாமிக்கு வரும்" என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி விமர்சனம் செய்துள்ளார்.

தொண்டர்கள் காலில் விழும் நிலை ஈபிஎஸ்க்கு வரும் - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

author img

By

Published : Sep 9, 2022, 11:03 PM IST

சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகம் வர இருப்பதால் தொண்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகம் வருவதை ஒட்டி, தொண்டர்கள் அதிக அளவு கூட இருப்பதால் பாதுகாப்பு அளிக்கக்கோரி டிஜிபியிடம் மனு அளித்துள்ளோம். கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி தைரியம் இருந்தால் நாளை பொதுக்குழுவை கூட்ட தேதி அறிவிக்கச்சொல்லுங்கள் பார்ப்போம்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், கட்சிப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். கட்சியைப் பாதுகாக்க வேண்டியது ஓபிஎஸ் அவர்களுடைய கடமை. கட்சியைப் பாதுகாக்க வேண்டிய முழு பொறுப்பும் ஓபிஎஸ் அவர்களிடம் இருக்கிறது. எனவே, எப்போது வேண்டுமானாலும் தலைமைக் கழகத்திற்கு வருவார். மேலும் அதிமுக அலுவலகம் என்றும் எடப்பாடி பழனிசாமியின் அப்பன் வீட்டு சொத்து இல்லை. அதிமுக தொண்டர்களுடைய வேர்வை சிந்தி உழைப்பில் உருவானது.

தொண்டர்கள் காலில் விழும் நிலை ஈபிஎஸ்ஸுக்கு வரும் - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

நிமிடத்திற்கு நிமிடம் நிறம் மாறு பச்சோந்தியாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். கட்சியில் அனைவரும் இணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள நிலையில் இன்று வைத்திலிங்கம், சசிகலாவை எதிர்பாராத விதமாக சந்தித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அவர்களைப்பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் மூவருக்கும் என்ன தகுதி இருக்கிறது.

தான் என்ற அகங்காரத்தோடு இருந்தவர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலின்போது தனது செயல்பாட்டால் தேமுதிகவிற்கும் தேர்தலில் சீட்டு கொடுக்காமல் கூட்டணியில் இருந்து பிரிந்தார்கள். தற்போது தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள். பெட்ரோல் பங்க் நடத்துவதற்கு மறைமுகமாக அனுமதி பெற்றுள்ள கே.பி.முனுசாமி திமுகவில் கள்ளத்தொடர்பில் இருக்கிறார்.

நாடாளுமன்றத்தேர்தலில் திமுகவிற்கு தாரைவார்த்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளார், கே.பி.முனுசாமி. விரைவில் ஓபிஎஸ் அதிமுக தலைமை கழகம் வருவார். அன்று அவர் கட்டளையின் பேரில் 50 ஆயிரம் தொண்டர்கள் அதிமுக தலைமைக்கழகம் வருவார்கள். ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை துரத்தியது போன்று ஒண்ட வந்த பிடாரியாக எடப்பாடி பழனிசாமி, கட்சித் தொண்டர்களாகிய எங்களை விரட்ட பார்ப்பது நடக்காது. தொண்டர்களில் காலில் விழுந்து தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறும் கூறக்கூடிய நிலை எடப்பாடி பழனிசாமிக்கு வரும்" என கூறினார்.

இதையும் படிங்க:அடித்தாடும் ஈபிஎஸ்..! பதுங்கி பாய தயாராகும் ஓபிஎஸ்..! அதிமுகவின் அடுத்த நகர்வு என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.