ETV Bharat / state

கோடநாடு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கை நான்கு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Oct 1, 2021, 9:07 PM IST

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23 அன்று நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற பாதுகாவலரைக் கொலைசெய்து, பொருள்கள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்டம் ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் எட்டு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சங்கர், மாவட்ட முன்னாள் எஸ்பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

நீலகிரி நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்யக் கோரி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல்செய்துள்ளனர்.

அதில், "இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது.

மேலும் காணாமல்போன பொருள்கள் எவை என்பது குறித்து சசிகலா, இளவரசிக்குத்தான் தெரியும். புலன் விசாரணைக்குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை. இதில் சில முக்கியக் குற்றவாளிகள் விடுபட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று (அக். 1) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறைத் தரப்பில் பதில் மனு தாக்கல்செய்ய நான்கு வார கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கு விசாரணையை நான்கு வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு; எடப்பாடி, சசிகலாவை விசாரிக்கக் கோரி புதிய மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.