சென்னை அமைந்தகரையில் மாஞ்சா நூல், பட்டம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரோந்து பணியில் ஈடுப்பட்ட காவலர்கள், அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த ஷாஜகான் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் விருகம்பாக்கம் பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக அவர் தகவல் அளித்தார். இந்தத் தகவலின் அடிப்படையில் காவலர்கள் அங்கு சென்று சோதனை செய்தபோது, காலணி கடை ஒன்றினுள்ளே 400-க்கும் மேற்பட்ட காத்தாடி, மாஞ்சா நூல், லொட்டாய் போன்ற பொருட்களை வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அதன் உரிமையாளரான தமீன் அன்சாரி என்பவரை கைது செய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குளத்தை காணவில்லை - பொதுமக்கள் புகார்!