சென்னை: ஶ்ரீரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைதன்யா தயாரிப்பில் உருவான படம் 'கிடா' (Goat). அறிமுக இயக்குநரான ரா.வெங்கட் இயக்கத்தில் பூ ராமு, காளி வெங்கட் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களாக நடித்த இப்படம் இந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியானது.
நல்ல பாராட்டுகளை பெற்ற இப்படம் திரையரங்குகளில் போதிய வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் யதார்த்த வாழ்வியலை அழகாகச் சொல்லும் ஒரு அழுத்தமான கலைப் படைப்பாக உருவாகியுள்ள 'கிடா' திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பூ ராமு, காளி வெங்கட் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரமாக நடித்துள்ள இந்த திரைப்படம், மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக உள்ளது. தனது பேரனுக்கு புதுத்துணி எடுத்துத் தர போராடும் கதைக் களத்தைக் கொண்டப் படமாக சினிமா ரசிகர்களை கவனம் ஈர்த்திருந்தாலும், ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
#Kida is OUT NOW and streaming on Simply South worldwide, excluding India.
— Simply South (@SimplySouthApp) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
▶️ https://t.co/2YNtVq6mHF@kaaliactor | #PooRamu | #Dileep | #Pandiyamma | #KidaOnSimplySouth | #SayNoToPiracy | #IdhuVeraLevelEntertainment pic.twitter.com/ZO4q6HmIlP
">#Kida is OUT NOW and streaming on Simply South worldwide, excluding India.
— Simply South (@SimplySouthApp) December 14, 2023
▶️ https://t.co/2YNtVq6mHF@kaaliactor | #PooRamu | #Dileep | #Pandiyamma | #KidaOnSimplySouth | #SayNoToPiracy | #IdhuVeraLevelEntertainment pic.twitter.com/ZO4q6HmIlP#Kida is OUT NOW and streaming on Simply South worldwide, excluding India.
— Simply South (@SimplySouthApp) December 14, 2023
▶️ https://t.co/2YNtVq6mHF@kaaliactor | #PooRamu | #Dileep | #Pandiyamma | #KidaOnSimplySouth | #SayNoToPiracy | #IdhuVeraLevelEntertainment pic.twitter.com/ZO4q6HmIlP
தாத்தாவாக நடித்த பூ ராமு, காளி வெங்கட் மற்றும் பேரனாக நடித்த தீபன் ஆகியோரின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருந்தது என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படம் இன்று (டிச. 15) அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
திரையரங்குகளில் பெருமளவிலான வரவேற்பு பெறாத நிலையில், தற்போது ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இது போன்ற சிறிய கருத்துக்கள் நிறைந்த படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பெறாமல் போவது, தமிழ் சினிமாவுக்கு ஆபத்தான ஒன்று என்று சினிமா நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சாதாரண கதைக்கு அழகான திரைக்கதை அமைத்து விமர்சனங்களின் பாராட்டை பெற்ற கிடா திரைப்படம் ஓடிடி தளத்தில் பெருவாரியான ரசிகர்களை மகிழ்விக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை 17ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்..!