ETV Bharat / state

புரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடி ராகம் எடுபடாது -கி. வீரமணி ஆவேசம் - k.veeramani

சென்னை: திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி, மோடியை கடுமையாக விமர்சித்து அறிக்க ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கி.வீரமணி
author img

By

Published : Apr 24, 2019, 2:23 PM IST

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வித்தைக்காரரான மோடி ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு ராகத்தினை' தேர்தல் வாக்குச் சேகரிப்புக் கச்சேரியில் இசைக்கிறார்! புரட்சியாளர் அம்பேத்கர் மண்ணுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கே ஒரு புது ‘‘பிரகடனத்தையே'' செய்துள்ளார்! பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் முன்னேற்றத்துக்காக அம்பேத்கர் நமக்கு அளித்த இட ஒதுக்கீட்டில் - தான் இருக்கும்வரை யாரும் கை வைக்க முடியாது என ஆவேசமாகப் பேசியுள்ளார். இப்படி பேசும் மோடி ஒரே வாரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டுவந்து, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களின் பொதுப்பங்கீட்டு உரிமையை பறித்தது ஏன். இதுதான் அம்பேத்கர் தந்ததை காப்பாற்றும் லட்சணமா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மண்டல் கமிஷனின் வேலை வாய்ப்புப் பரிந்துரையை அமல்படுத்தியதற்காகவே, சமுகநீதிக் காவலர் வி.பி. சிங்கின் ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவை 10 மாதங்களிலேயே பின்வாங்கிக் கொண்டு, கவிழ்த்த ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பா.ஜ.க. சமுகநீதியைக் காப்பாற்றத்தான் அதைச் செய்ததா? மோடி அப்போதும் இருந்தாரே? பிகார் மாநில சட்டமன்ற தேர்தலின்போது 2015 அக்டோபர் 11 அன்று கோரக்பூரில் பேசிய ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பாகவத் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பேசினாரா, இல்லையா? தேர்தல் நேரத்தில் அது பிரச்னையாக வெடித்தபோது, அந்தர்பல்டி அடித்தாரே! உதட்டளவில் தானே இந்த ஆதரவு? என்று வீரமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் வாக்குக்காக ராகம் பாடும் மோடி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களின் இட ஒதுக்கீட்டை எப்படி பாதுகாக்கிறார்? பிரதமர் அலுவலகத்தில் இவர்களில் எத்தனை பேரை அவர் நியமித்துள்ளார்? உச்சநீதிமன்ற - உயர்நீதிமன்றங்களில் எத்தனை பேர் நீதிபதிகளாக இவரது ஆட்சிக் காலத்தில் நியமனம் பெற்றுள்ளார்கள்? இப்படி அடுக்கடுக்காக எத்தனையோ கேள்விகளை எழும்பினால், மோடி வாயடைத்துக்கொள்ள வேண்டிய நிலையே ஏற்படும்! சமூகநீதியின் காவலர் என்று இவர் தன்னைத் தானே தம்பட்டம் அடித்துப் பேசுவது, ஓநாய் ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு, உனக்குப் பத்திரமான இடம் என் வயிறுதான் என்று கூறிய கதை போன்றதல்லவா? இனியும் ஏமாறமாட்டார்கள் ஒடுக்கப்பட்டோர்! இனிமேல் மோடியின் வித்தைகள் எடுபடவே எடுபடாது என்று கி. வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த சமுகநீதி மண்ணான மகாராட்டிர மண்ணுக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தான் உயிரோடு இருக்கும்வரை இட ஒதுக்கீட்டில் யாரும் கை வைக்க முடியாது என்று கூறியிருப்பது அசல் சந்தர்ப்பவாதமே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனவே, ‘வித்தைக்காரரான' பிரதமர் மோடி ஒவ் வொரு நேரத்தில் ஒவ்வொரு ‘ராகத்தினை' தேர்தல் வாக்குச் சேகரிப்பு கச்சேரியில் இசைக்கிறார்!
‘‘போர் விமானத்தின் விமானி அபினந்தனை பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் விடுதலை செய்யா விட்டால், உடனே பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது கட்டாயம்  ஏற்படலாம் என்று நான் விடுத்த எச்சரிக் கைக்குப் பயந்தே அவரை உடனே விடுதலை செய்தார்'' என்பதுபோல் இரண்டு நாள்களுக்கு முன் பேசி ஒரு ‘‘புது குண்டை'' வீசியுள்ளார் பிரதமர் மோடி!
ஏனோ இத்தனை நாள் கழித்து இந்த ‘‘மாபெரும் உண்மையை''(?) ஏன் வெளியிடுகிறார் என்று சிலர் கேட்கக்கூடும்; அப்படி யாராவது கேட்டால், அவர்கள் ‘‘தேச விரோதிகள்; பாகிஸ்தான் ஏஜெண்டுகள்'' என்று பதிலடி பா.ஜ.க. தரப்பில் கொடுத்தாலும் வியப்பில்லை!

புரட்சியாளர் அம்பேத்கர் மண்ணுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி; அங்கே ஒரு புது ‘‘பிரகடனத்தையே'' செய்துள்ளார்!
‘‘பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்க ளின் முன்னேற்றத்துக்காக அம்பேத்கர் நமக்கு அளித்த இட ஒதுக்கீட்டில் நான் இருக்கும்வரை யாரும் கை வைக்க முடியாது'' என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

நீண்ட காலம் அவர் வாழவேண்டும் - இதற் காகவே!
ஆனால்,  இவர் கொண்டு வந்து ஒரே வாரத்தில் நிறைவேற்றினாரே - பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்ற பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் ‘‘கோட்டாவான'' - வாய்ப்பினை - பொதுப் போட்டியிலிருந்து குறைத்ததின்மூலம் பறித்தாரே - அதுதான் அம்பேத்கர் தந்ததை காப்பாற்றும் இலட் சணமா?

மண்டல் கமிஷனின் வேலை வாய்ப்புப் பரிந் துரையை அமல்படுத்தியதற்காகவே, சமுகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவை 10 மாதங்களிலேயே பின்வாங்கிக் கொண்டு, கவிழ்த்த ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பா.ஜ.க. சமுகநீதியைக் காப்பாற்றத்தான் அதைச் செய்ததா?

மோடி அப்போதும் இருந்தாரே!

பிகார் மாநில  சட்டமன்ற தேர்தலின்போது 2015 அக்டோபர் 11 அன்று கோரக்பூரில் பேசிய ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பாகவத் ‘‘இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும்'' என்று பேசினாரா, இல்லையா?
தேர்தல் நேரத்தில் அது பிரச்சினையாக வெடித்த போது, அந்தர்பல்டி அடித்தாரே!
உதட்டளவில் தானே இந்த ஆதரவு? இவர் பிற்படுத்தப்பட்டவர் என்றும், இவரை எதிர்ப்பதால் பிற்படுத்தப்பட்ட சமுகங்களையே இழிவுபடுத்தி விட்டார் என்றும் திடீரென மோடி அவர்கள் தேர்தல் பரப்புரைகளில் இப்போது கூறுவது, அசல் சந்தர்ப்பவாத ராகம் என்பதைத் தவிர வேறு என்ன?

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களின் இட ஒதுக்கீட்டை எப்படி பாதுகாக்கிறார்?
இவரது  பிரதமர் அலுவலகத்தில் இவர்களில் எத்த னைப் பேர்களை நியமித்துள்ளார்?
உச்சநீதிமன்ற - உயர்நீதிமன்றங்களில் எத்தனைப் பேர் நீதிபதிகளாக இவரது ஆட்சிக் காலத்தில் நிய மனம் பெற்றுள்ளார்கள்?
இப்படி அடுக்கடுக்காக எத்தனையோ கேள்வி களை எழும்பினால், மோடி வாயடைத்துக் கொள்ள வேண்டிய நிலையே ஏற்படும்!
தாழ்த்தப்பட்ட சமுக மாணவர்களை இவரது ஆட்சியில் டில்லி தலைநகர் பல்கலைக் கழகங்களில் எப்படி நடத்தினர்?

சமுகநீதியின் காவலர் என்று இவர் தன்னைத் தானே தம்பட்டம் அடித்துப் பேசுவது, ‘ஓநாய் ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு, உனக்குப் பத்திர மான இடம் என் வயிறுதான்' என்று கூறிய கதை போன்றதல்லவா?

இனியும் ஏமாறமாட்டார்கள் ஒடுக்கப்பட்டோர்!

இனிமேல் வித்தைகளும் எடுபடாது! எடுபடவே எடுபடாது” என்று தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.