ETV Bharat / state

கதர் - கிராமத் தொழில்கள் துறை மானிய கோரிக்கை: 10 புதிய அறிவிப்புகள் - அமைச்சர் ஆர். காந்தி

கதர் - கிராமத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கையின்போது துறையின் அமைச்சர் ஆர். காந்தி 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மானிய கோரிக்கை

author img

By

Published : Sep 6, 2021, 7:49 PM IST

சென்னை: சேப்பாக்கத்திலுள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு திருத்திய வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் நடைபெற்றுவருகின்றன.

அதன்படி, இன்று (செப். 6) கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மீதான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் ஆர். காந்தி 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு:

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.44 லட்சம் செலவில் அங்காடி கட்டடம் புனரமைக்கப்படும்.
  • கதர், பாலிவஸ்திரா, பட்டு ரகங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மூலம் ரூபாய் 20 லட்சம் செலவில் விளம்பரப்படுத்தப்படும்.
  • தற்போது உள்ள கதர் நூல்போர், நெசவாளர் நல வாரியம் மறுசீரமைப்பு செய்யப்படும்.
  • மக்களைக் கவரும் வண்ணம் ரூபாய் 4 லட்சம் செலவில் கிராமப் பொருள்களுக்கான புதிய மேல் உரைகள், பட்டுப் புடவைகளுக்கான அட்டைப்பெட்டிகள் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • ரூபாய் 5.10 லட்சம் செலவில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தச்சு கருமார அலகில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படும்.
  • கதர் பட்டு நெசவாளர்கள் புதிய வடிவமைப்புகளை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
  • ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஆகிய இரண்டு இடங்களில் ரூபாய் 16 லட்சம் செலவில் தானியங்கி சோப்பு வெட்டும் இயந்திரம் நிறுவப்படும்.
  • திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பனை பொருள் விற்பனை கூட்டுறவு சம்மேளனம் வளாகத்தில் பனை வெல்லம் உற்பத்திச் செய்திட பொது பயன்பாட்டு மையம் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • பனைப் பொருள்கள் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தப்படும்.
  • பனை பொருள்களை நவீனமுறையில் பேக்கிங் செய்து விற்பனை செய்திட புதிய எந்திரங்கள் ரூ. 16.50 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து நிறுவப்படும்.

இதையும் படிங்க: கைத்தறி - துணிநூல் துறை மானியக் கோரிக்கையில் 25 புதிய அறிவிப்புகள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.