ETV Bharat / state

‘ஐஐடி மாணவி மரணத்திற்கு காரணமான சுதர்சன் பத்மநாபனை கைது செய்க!’ - ஜி. ராமகிருஷ்ணன் - justice for fathima latheef suicide

சென்னை: ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் மரணத்திற்கு காரணமாயிருந்த பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கேரள பொதுநல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Nov 22, 2019, 4:05 PM IST

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல அது ஒரு நிறுவனப் படுகொலை என்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்யக்கோரியும், ஐஐடியில் தொடரும் தற்கொலைகளைத் தடுக்கக் கோரியும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில், சென்னையைச் சேர்ந்த கேரள பொதுநல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கேரள பொதுநல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "கிண்டியிலுள்ள ஐஐடியில் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த 8ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அது 9ஆம் தேதிதான் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் பயன்படுத்திய செல்ஃபோனில், தனது தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மாணவி தற்கொலை செய்து இன்றுடன் 12 நாட்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை காவல் துறையினர் உருப்படியான விசாரணையை மேற்கொள்ளவில்லை. மாணவியின் செல்ஃபோனில் உள்ள குறிப்பில், ’மேலும் தகவலுக்கு நோட்சை பார்க்கவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

அதை காவல் துறையினர் படித்து இந்நேரம் அனைத்தையும் தெரிந்து கொண்டிருப்பார்கள். எனினும், உரிய ஆதாரம் இல்லையென்று குறிப்பிடுகின்றனர். எனவே, அவர் மரணத்திற்கு காரணமாயிருந்த சுதர்சன் பத்மநாபனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இறுதியாக, ஐஐடி மாணவியின் தற்கொலை குறித்து கேரள இளைஞர் ஒருவர், நாடகம் ஒன்றை நடித்திக்காட்டினார். அது அனைவரின் துயரங்களையும் வெளிக்கொண்டுவந்தது என்றே கூறலாம்.

இதையும் படிங்க: ஃபாத்திமா மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரிய வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Intro:Body:சென்னை ஐஐடி மாணவி பத்திமா லத்தீப் தகொலை செய்து கொண்தை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இங்கிருக்கும் கேரள பொதுநல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு கண்டனங்களை பதிவு செய்தார்.

அப்போது பேசிய அவர், "கிண்டியிலுள்ள ஐஐடி உயர்கல்வி நிலையத்தில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8 ஆம் தேதி ற்கொலை செய்துகொண்டார். அது 9 ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது. அவர் பயன்படுத்திய மொபைல் போனில் தற்கொலைக்கு ஆசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாத்திமா தற்கொலை செய்து கொண்டதை தமிழகத்தில் இருக்கும் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டித்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டு இன்றுடன் 12 நாள்கள் ஆகிறது. ஆனால் இதுவரை காவல்துறையினர் உருப்படியான விசாரணை நடத்தவில்லை.

எங்கள் மாநில மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இங்குமட்டுமின்றி கோராக்பூர், டெல்லி ஐஐடி நிறுவனங்களிலும் மாணவர்கள் மன அழுத்ததுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே இதனை தடுக்கும் வகையில் பாத்திமா வழக்கில் உரிய விசாரணை நடத்தி அந்த ஆசிரியரை முதற்கட்டமாக தற்கால பணிநீக்கம் செய்ய வேண்டும் அதுவரை பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தும் என்பதை மார்க்சிஸ்டே கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டு கொள்கின்றேன்.

மாணவியின் குறிப்பில் மேலும் தகவலுக்கு நோட்சை பார்க்கவும் என்று குறிப்பிட்டுள்ளர். அநை காவர்துறையினர் படித்து அனைத்தையும் தெரிந்து கொண்டிருப்பார்கள். எனினும் உரிய ஆதாரம் இல்லையென்று குறிப்பிடுகின்றனர். மதிப்பெண் குறைவாக போட்டியிருப்பதை ஆசிராயரிடம் துறை தலைவரிடம் கூறியபோதும் அது சரி செய்யப்படவில்லை. இதனால் பாத்திமா லத்தீப் மன அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளார். எனவே அவர் மரணத்திற்கு காரணமாயிருந்த ஆசிராயர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எறு தெரிவித்தார்.

இதன் இறுதியாக ஐஐடி தற்கொலை குறித்து கேரள இளைஞர் ஒருவர் நாடகம் ஒன்றை நடித்து காட்டினார். அது அனைவரின் துயரங்களையும் வெளி கொண்டுவந்தது என்றே கூறலாம். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.