ETV Bharat / state

காஷ்மீர் விவகாரம் - வலுக்கும் போராட்டம்! - chennai

சென்னை: காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியதை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர் கண்டன போராட்டம் நடத்தினர்.

காஷ்மீர் விவகாரம் - வலுக்கும் போராட்டம்!
author img

By

Published : Aug 6, 2019, 10:50 PM IST

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவை மத்திய பாஜக அரசு நேற்று நீக்கியது. இதனைக் கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர் கண்டன போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மே 17 இயக்கம், திராவிட இயக்க தமிழர் பேரவை, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட 30 இயக்கங்கள் சார்பாக நூற்றுக்கும் அதிகமானோர் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனை தொடர்ந்து திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், 'ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி இது. அவர்கள் நினைத்தால் எல்லா மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றி அமைப்பார்கள். இந்தியாவில் ஒரே அரசியல்தான் அது டெல்லியில் இருக்கும் என்பதை அவர்கள் தொடங்கி உள்ளனர். இதனை எதிர்ப்போம். ஜனநாயகத்திற்கு குரல் கொடுத்து தமிழ்நாடு மக்கள் என்றும் போராடுவார்கள்' என்றார்.

தொடர்ந்து, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி பேசுகையில், ' ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நீண்ட நாட்கள் கனவு பலித்துள்ளது. காஷ்மீர் பிரச்னை என்பது ஒரு மாநில பிரச்னையாக இருந்து வந்த நிலையில் அதை உலக பிரச்னையாக மோடி அரசு மாற்றியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தை மத அடிப்படையில் பார்க்காமல் அவர்கள் விருப்பப்படி அமைத்து தர வேண்டும்' என தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் - வலுக்கும் போராட்டம்!

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சம்பத்,' முத்தலாக் தடை சட்டம், தேசிய புலனாய்வு முகமை சட்டம், தற்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 விதி வாபஸ் பெறும் சட்டம், குறைந்தபட்சம் கூலி சட்டம் என அனைத்தும் தேச நலனுக்கு எதிரானது” என்றார்.

Intro:Body:ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து அதனை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்த முயன்ற பல்வேறு அமைப்பை சார்ந்தவர்களை காவல்துறை கைது செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டை பனங்கள் மாளிகை அருகில் மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மே 17 இயக்கம், திராவிட இயக்க தமிழர் பேரவை, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட 30 இயக்கங்கள் சார்பாக நூற்றுக்கும் அதிகமானோர் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனை தொடர்ந்து திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி இது. இதனை வெறும் சிறுபான்மையினர் பிரச்சனை என நினைப்பது அடிப்படை ஏமாற்றம். இது ஜனநாயகத்திற்கு போராட்டம். 1948 ஒப்பந்த்திற்கு செய்த துரோகம் இது. அவர்கள் நினைத்தால் எல்லா மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றி அமைக்கப்படும். இந்தியாவில் ஒரே அரசியல் அது தில்லியில் இருக்கும் என்பதை அவர்கள் தொடங்கி உள்ளனர். இதனை எதிர்ப்போம். ஜனநாயகத்திற்கு குரல் கொடுத்து தமிழ்நாடு மக்கள் என்றும் போராடுவார்கள்.

தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி பேசுகையில், காஷ்மீர் மாநிலத்தை துண்டாக உடைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நீண்ட நாட்கள் கனவை நினைவாக்கியுள்ளது பிஜேபி அரசு. காஷ்மீர் பிரச்சனை என்பது ஒரு மாநில பிரச்சனை இருந்து வந்த நிலையில் அதை உலக பிரச்சனையாக மோடி அரசு மாற்றியுள்ளது. இந்திய உடைய வெளியுறவு கொள்கைக்கும், ராஜதந்திர அணுகுமுறைக்கு கிடைத்த தோல்வியாக கருதுகிறோம். காஷ்மீர் மாநிலத்தை மத அடிப்படையில் பார்க்காமல் அவர்கள் விருப்பப்படி அமைத்து தர வேண்டும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.