சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் நெடுமாறன். இவருக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியும், அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோருக்கு சொந்தமாக பனையூரில் உள்ள நிலத்தை கடந்த 2009ஆம் ஆண்டு விற்க முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளனர். அதற்கு முன் பணமாக 4 கோடியே 50 லட்சம் ரூபாயை செல்வியும், அவரது மருமகன் ஜோதிமணியும் வாங்கி நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் நெடுமாறனுக்கு பணம் கொடுக்காமல் மிரட்டியதாக தொடர்ந்த வழக்கு பூவிருந்தவல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வி, அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'கருணாநிதியின் மகனா என யோசிக்கும் அளவுக்கு நிதானம் இழந்துபேசும் ஸ்டாலின்!'