ETV Bharat / state

ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக எம்வி கார்த்திகேயன் பொறுப்பேற்பு - இந்திய தகவல் தொழில்நுட்பம்

மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் புதிய இயக்குநராக எம்வி கார்த்திகேயன் பொறுப்பேற்றார்.

எம்வி கார்த்திகேயன்
எம்வி கார்த்திகேயன்
author img

By

Published : Oct 13, 2022, 6:23 PM IST

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தால் ஐஐஐடிடிஎம் கல்வி நிறுவனத்தின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்ட கார்த்திகேயன் ஆட்சிக்குழுமத் தலைவர் சடகோபன், பதிவாளர், மூத்த பேராசிரியர்கள், துறை தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார்.

பேராசிரியர் எம்வி கார்த்திகேயன் ஐஐடி திருப்பதி மற்றும் ஐஐடி ரூர்க்கியில் ஆர்.எஃப் இன்ஜினியரிங் பேராசிரியராக இருந்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி - புவனேஸ்வரின் முன்னாள் மாணவர் ஆவர்.

இவர், 1985 இல் முதுகலைப் பட்டம் மற்றும் 1992-ல் முனைவர் பட்டமும் பெற்ற்றவர். இவர் 1989 முதல் 2001 வரை பிலானியில் உள்ள மத்திய மின்னணுவியல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக இருந்தார்.

மேலும் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் பெல்லோஷிப் மற்றும் ஹில்டெகார்ட்-மேயர் ரிசர்ச் பெல்லோஷிப் எலக்ட்ரிக்கல் சயின்சஸ் ஆகியவற்றைப் பெற்றவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விப்பணி மற்றும் IEEE (USA), IET (UK), IETE (இந்தியா), IE (இந்தியா), VEDAS (இந்தியா) மற்றும் EuMA (EU) மற்றும் PSSI ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார்.

நான்கு புத்தகங்கள் மற்றும் உயர் புகழ்பெற்ற பத்திரிகைகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். ஐஐடி ரூக்கியின் பல பொறுப்புகளில் இருந்துள்ளார்.

இயக்குநராகப் பொறுப்பேற்ற கார்த்திகேயன், நிறுவனத்தின் ஆராய்ச்சி சூழலை மேம்படுத்தவதே தனது முழு முயற்சியாக இருக்கும். அரசு நிறுவனங்கள், தொழில்துறைகளிடமிருந்து அதிக நிதியுதவி பெறுதல் மற்றும் ஆய்வு கட்டுரைகள் புகழ்பெற்ற ஆய்வு பத்திரிகைகளில் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இளைஞர்களே உஷார்:வெளிநாட்டு வேலை மோகம்..ஏமாற்றும் கும்பல் ஏராளம் - டிஜிபி அட்வைஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.