கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வில்சன் நேற்று முன் தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், நேற்று அவரை சுட்டுக் கொன்றதாக தவ்ஃபீக், அப்துல் சமீம் என்ற இரண்டு இளைஞர்களின் புகைப்படத்தை கன்னியாகுமரி காவல்துறை வெளியிட்டுள்ளது.
இதில், அப்துல் சமீம் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின், அப்துல் சமீம் தலைமறைவானதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:
சிறுமியை வன்புணர்வு செய்த பாஜக முன்னாள் முதலமைச்சரின் உதவியாளர் கைது!