ETV Bharat / state

காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் காலமானார்! - காங்கிரஸ் எம்பி வசந்தகுமார்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார், கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை (ஆக.28) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வசந்தகுமார்
வசந்தகுமார்
author img

By

Published : Aug 28, 2020, 9:02 PM IST

Updated : Aug 28, 2020, 10:31 PM IST

சென்னை: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார், கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், தொழிலதிபருமான ஹெச்.வசந்தகுமார் (70), கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை (ஆக.28) உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரத்தில், கடந்த 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார். கடந்த 1970இல் விற்பனையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய வசந்தகுமார், வசந்த & கோ என்ற நிறுவனத்தை கடந்த 1978ஆம் ஆண்டு தொடங்கினார். வீட்டு உபயோகப் பொருள்களை விற்று, தமிழ்நாடு முழுவதும் வசந்த & கோ பிரபலமானது.

நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக, கடந்த 2006ஆம் ஆண்டு அவர் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக களமிறங்கி தோல்வி அடைந்தார். இதையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தனின் சகோதரர் வசந்த குமார் ஆவார்.

கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் அவரது உடல்நிலையில் அதிகரித்ததன் காரணமாக, சிகிச்சை பலனின்றி மாலை 6.56 மணியளவில் வசந்தகுமார் உயிரிழந்தார் என, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

  • மறைந்த திரு எச்.வசந்தகுமார் அவர்களின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக நாளை (29.08.2020) சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    — KS_Alagiri (@KS_Alagiri) August 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஹெச்.வசந்தகுமார் உடல் பொது மக்களின் பார்வைக்காக, நாளை (ஆக.29) காலை 10 மணியளவில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முஹர்ரம் ஊர்வலம் - காஷ்மீரின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு

Last Updated : Aug 28, 2020, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.