தமிழ்நாட்டில் உரத் தட்டுப்பாடு இருப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து மத்திய உரத் துறை செயலாளரை தொடர்பு கொண்டு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் நிலவிவரும் உரத் தட்டுப்பாடு குறித்தும், இந்தத் தட்டுப்பாட்டால், கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு உரங்கள் விற்கப்படுவது குறித்தும் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த மத்திய உரத் துறை செயலாளர், தமிழ்நாடு விவசாயத் துறையோடு இணைந்து உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் உர உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு, உற்பத்தியை அதிகரிக்கும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் யூரியா உரத் தட்டுப்பாடு - கலங்கிய விவசாயிகள்!