சென்னை: மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பல வட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி நேற்று (பிப். 12) பரப்புரை செய்தார்.
அப்போது மேடையில் பேசிய அவர், "திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், குடும்ப அட்டைக்குச் செல்பேசி தருவதாக அவர்கள் ஆட்சியில் சொன்னார்களே... செய்தார்களா? மகளிருக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்குவதாகச் சொன்னார்களே... செய்தார்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.
![கனிமொழி, kanimozhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14451241_k.jpg)
'கஜானாவை காலி செய்த அதிமுக'
மேலும், அவர், "ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்குத் தேவையான திட்டங்களை ஒவ்வொன்றாகச் செய்து வருகிறார். கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்ற பின்பும், பால் விலை குறைவு, மகளிருக்குப் பேருந்து பயணம் இலவசம் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.
-
இன்று சென்னை - மயிலாப்பூர் SKP புரம் பகுதியில், உள்ளாட்சியிலும் நமது நல்லாட்சி தொடர வாக்கு சேகரித்த போது pic.twitter.com/P1H4VZ5Dge
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இன்று சென்னை - மயிலாப்பூர் SKP புரம் பகுதியில், உள்ளாட்சியிலும் நமது நல்லாட்சி தொடர வாக்கு சேகரித்த போது pic.twitter.com/P1H4VZ5Dge
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 12, 2022இன்று சென்னை - மயிலாப்பூர் SKP புரம் பகுதியில், உள்ளாட்சியிலும் நமது நல்லாட்சி தொடர வாக்கு சேகரித்த போது pic.twitter.com/P1H4VZ5Dge
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 12, 2022
திமுகவைப் பார்த்து கேள்வி கேட்பதற்கு அதிமுகவிற்கு அருகதை இல்லை. 'மக்களைத் தேடி மருத்துவம்' வயதானவர்களுக்கும், சாதாரண சாமானிய மக்களுக்கு மிக அருமையான திட்டம்" எனக் கூறினார்.
'திராவிட இயக்க' திட்டம்
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, "தமிழ்நாட்டில் மதக்கலவரம் வந்துவிடக்கூடாது. மாணவர்கள் அதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட தொலைநோக்குத் திட்டம்தான் திராவிட இயக்கம். அந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தால் மத பிரச்சினைகள் தமிழ்நாட்டில் இல்லை.
பாஜக போன்ற அரசியல் கட்சிகள், இளைஞர்கள் மத்தியில் மதரீதியான வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் ஏற்படுத்துவது கண்டிக்கதக்கது. தேசியக்கொடியை இறக்கி விட்டுக் காவிக் கொடியை ஏற்றுவதுதான் தேசப்பற்றா?.
-
நமது நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, இன்று சென்னை ராயபுரத்தில் மூலக்கொத்தளம் பகுதியில் வாக்கு சேகரித்த போது. pic.twitter.com/WXTV4iXVvS
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">நமது நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, இன்று சென்னை ராயபுரத்தில் மூலக்கொத்தளம் பகுதியில் வாக்கு சேகரித்த போது. pic.twitter.com/WXTV4iXVvS
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 12, 2022நமது நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, இன்று சென்னை ராயபுரத்தில் மூலக்கொத்தளம் பகுதியில் வாக்கு சேகரித்த போது. pic.twitter.com/WXTV4iXVvS
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 12, 2022
கல்வி என்பது அறிவியல்பூர்வமானதாக இருக்க வேண்டும். ஆனால் புதிய கல்விக் கொள்கை அறிவியலை ஒதுக்கிவைத்துவிட்டு தவறான பிரச்சாரத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகத்தான் கல்வியை மாநில பட்டியலில் இணைக்க வலியுறுத்துகிறோம்.
![கனிமொழி, kanimozhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-kanimolzhi-7209106_12022022214706_1202f_1644682626_919.jpg)
மக்களுக்கு அறிவித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில் விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வாக்குறுதி நிறைவேற்றப்படும். இந்த தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இது 2007 அல்ல; பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - ஹெச்.ராஜா எச்சரிக்கை