சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சென்னை மண்டல மாநில செயலாளராக இருந்தவர் கமீலா நாசர். இவர் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் கமீலா நாசரை நீக்குவதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் தாம் விலகியதற்கான காரணம் குறித்து கமீலா நாசர் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், "என் சொந்த பணிகளை காரணம் கருதி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன்.
இந்த நேரத்தில் அரசியல் அட்சாரம் கற்றுத் தந்த ஆசான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
![kamila Nasser has commented on rumors about leaving mnm party](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-kamila-nassar-statement-script-7205221_21042021171520_2104f_1619005520_978.jpg)
என்னோடு பயணித்த கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் நன்றிகள். இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடை பெறுகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.