ETV Bharat / state

இது யாருடைய இந்தியா? - அதானியைச் சாடிய கமல் - Actor Kamal Haasan

அதானியின் நாள் ஒன்றுக்கான வருமானம் 1,000 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவலைப் பகிர்ந்த கமல், இது யாருடைய இந்தியா? எனக் கேள்வி எழுப்பி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

கமலின் ட்விட்டர் பதிவு
கமலின் ட்விட்டர் பதிவு
author img

By

Published : Oct 1, 2021, 6:43 PM IST

இந்தியாவின் டாப் 10 பணக்காரர் பட்டியலை, ஐ.ஐ.எஃப்.எல். வெல்த் ஹுரூன் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுவருகிறது. இந்த அமைப்பால் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலும் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது.

இந்த அமைப்பு தற்போது வெளியிட்ட தகவலின்படி, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட அதிகரித்திருப்பதாகத் கூறப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு ரூ.1,002 கோடி வருமானம்

அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, இந்த ஆண்டும் ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ரூ.5.6 லட்சம் கோடி கௌதம் அதானி இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார். இருப்பினும் இரண்டாவது இடத்தில் உள்ள கௌதம் அதானி, அவரது குழுமத்தின் வளர்ச்சி கடந்த ஆண்டைக் காட்டிலும் 261 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதன்படி நாள் ஒன்றுக்கு அதானி குழுமம் ரூ. 1,002 கோடியை வருமானமாக ஈட்டுவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதானியைச் சாடி கமல் ட்வீட்

இந்நிலையில் கரோனா காலத்தில் தனிநபர் வருமானமானது பெருமளவு குறைந்துள்ள நிலையில், டாப் 10 பணக்காரர்களின் வருமானம் உயர்ந்துள்ளதைச் சாடி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

கமலின் ட்விட்டர் பதிவு
கமலின் ட்விட்டர் பதிவு

அதில், “ தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து, வறுமைக்கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதானியின் ஒருநாள் வருமானம் 1,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?” எனக் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.