ETV Bharat / state

தமிழ்நாடு பின்னடைவில் முதலிடத்தில் இருக்கிறது - கமல் ஹாசன் - சென்னை செய்திகள்

முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழ்நாடு பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது என கமல்ஹாசன் குற்றச்சாட்டியுள்ளார்.

Kamal
Kamal
author img

By

Published : May 14, 2020, 11:35 AM IST

கரோனா தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தொழிற்கூடங்கள், போக்குவரத்து, விவசாயம் என நாடு முழுவதும் நடைபெற்று வந்த அனைத்து சேவைகளும் வணிக நிறுவனங்களும் இயங்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் கடந்த மே நான்காம் தேதி முதல் ஊரடங்கு விதிகளில் சில தளர்வுகள் செய்து அறிவித்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் மே ஏழாம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகியவை இருந்து வருகிறது. இதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

  • முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது.
    கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது.
    காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. #தாங்குமாதமிழகம்

    — Kamal Haasan (@ikamalhaasan) May 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனைத்தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழ்நாடு பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது.

கரோனா பாதிப்பில் எட்டாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.