ETV Bharat / state

டோக்கியோ ஒலிம்பிக் வீரர்கள் 'உண்மையான உலக நாயகர்கள்' - கமல் வாழ்த்து - chennai

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று (ஜூலை.14) காணொலி மூலம் கலந்துரையாடினார்.

கமல் வாழ்த்து
கமல் வாழ்த்து
author img

By

Published : Jul 15, 2021, 1:15 PM IST

Updated : Jul 15, 2021, 4:08 PM IST

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோருடன் நேற்று கலந்துரையாடி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், "வறுமையின் பிடியில் உள்ள போதும் சாதனையாளர்களாகத் திகழும் நீங்கள், உண்மையான உலக நாயகர்கள். இந்தியாவை உலகமே திரும்பி பார்க்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். ஒரு பெரிய பேரரசு கூட 500 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது கிடையாது. ஏழ்மையும் அப்படித்தான். ஒரு திறமைசாலி நினைத்தால் ஏழ்மையை ஓட ஓட விரட்ட முடியும்.

சுய மரியாதையும் விளையாட்டும்

டோக்கியோ ஒலிம்பிக் வீரர்கள் 'உண்மையான உலக நாயகர்கள்' - கமல்

இந்தியாவின் தங்கச்சுரங்கம் நீங்கள். இது வெறும் தங்கப் பதக்கத்திற்காக அல்ல. நீங்கள் கற்றவையை மற்றவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அது நீங்கள் செய்யவேண்டிய கடமை.

போட்டியை நிதானமாக, பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள். உங்கள் மீது நீங்கள் கொண்டுள்ள சுய மரியாதையைப் போலவே, உங்கள் விளையாட்டையும் மரியாதையுடன் எதிர்கொள்ளுங்கள்.

நீங்கள் வெற்றியுடன் திரும்பும்போது உங்களைப் பாராட்ட நாங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்" என்று வீரர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

தொடர்ந்து ”கமல்ஹாசன் எங்களுக்காக நேரம் ஒதுக்கி ஊக்குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிற்கு பதக்கங்களை வெல்ல முழு முயற்சியை செலுத்துவோம்” என்று ரேவதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அனைவரும் தங்கம் வெல்வதே கனவு' - விளையாட்டுத்துறை அமைச்சர்

Last Updated : Jul 15, 2021, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.