சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றன. பல பகுதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதிகமான இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது.
நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இந்தத் தேர்தலில் தனித்துக் களமிறங்கின. இருப்பினும், இரண்டு கட்சிகளாலும் இந்தத் தேர்தலில் ஒரு இடத்திலும்கூட வெல்ல முடியவில்லை.
இந்த நிலையில் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி. ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மக்கள் பணி இன்னும் வேகமாகத் தொடரும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் - தடுப்பணை கட்ட கோரிக்கை