மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன், கடந்த 18ஆம் தேதி காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஜே.என்.எஸ் மூர்த்தி தலைமையில் எலும்பியல் மருத்துவ நிபுணர் மோகன் குமார் தலைமையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மருத்துவ குழுவினரின் தொடர் கண்காணிப்பில் இருந்த கமல், இன்று காலை 23ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். அப்போது, பட்டினப்பாக்கத்தில் உள்ள சோமர்செட் இல்லத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் சில நாள்கள் ஓய்வில் இருப்பார். 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை அவர் விரைவில் தொடங்குவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை கமல் ஹாசன் வீடு திரும்ப வாய்ப்பு!