ETV Bharat / state

”வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும்!” - கமல் ஹாசன் - தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து கமல்ஹாசன்

சென்னை : தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அனுப்பப்படும் மனுக்கள் அதிக அளவில் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கமல் ஹாசன், வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Kamal
Kamal
author img

By

Published : Oct 12, 2020, 12:58 PM IST

தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அமல்படுத்தப்பட்டது. ஆதர்ஷ் ஊழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊழல்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தான் கண்டறியப்பட்டது.

இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு முதல் 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1.75 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனுப்பப்படும் மனுக்களுக்கு பதிலளிக்க காலதாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் இதனை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.

2.2 லட்சம் கோரிக்கைகள் இன்றும் மத்திய, மாநில தகவல் உரிமை ஆணையங்களில் நிலுவையில் உள்ளன. வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும். ஒவ்வொரு குடிமகனும் தனக்கான உரிமையைப் பெறத் தெளிந்தால் நாமே தீர்வு" என்று பதிவிட்டுள்ளார்.

  • தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2.2 லட்சம் கோரிக்கைகள் இன்றும் மத்திய மாநில தகவல் உரிமை ஆணையங்களில் நிலுவையில் உள்ளன.

    வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும்.

    ஒவ்வொரு குடிமகனும் தமக்கான உரிமையினைப் பெறத் தெளிந்தால்,நாமே தீர்வு.

    — Kamal Haasan (@ikamalhaasan) October 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.