சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். தனது முதல் தேர்தல் பரப்புரையை மதுரையில் தொடங்கிய கமல்ஹாசன், இன்று (டிச. 20) முதல் 23ஆம் தேதி வரை காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக இன்று மாலை ஆழந்தூரில் இருந்து தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை கமல்ஹாசன் மேற்கொள்ளகிறார். மேலும் போரூர், பூந்தமல்லி, காஞ்சிபுரத்தில் உள்ள கட்சி ஊழியர்களையும் சந்திக்க இருக்கிறார். பிள்ளையார் பாளையம், கீழ் அம்பி, செய்யாறு, செஞ்சி போன்ற இடங்களுக்குச் செல்லும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் வீட்டிற்கு செல்லவுள்ளார்.
வரும் 22ஆம் தேதி விழுப்புரத்தில் பரப்புரையில் ஈடுபடவுள்ள நிலையில் கட்சியின் அலுவலக பொறுப்பாளர்கள், என் ஜி ஒக்கள், பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்களையும் சந்திக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தல் 2ஆம் கட்ட பரப்புரையைத் தொடங்கும் கமல்ஹாசன்